Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாட்ஸ்ஆப்புக்கு போட்டியாக ஆப்களை களமிறக்கும் கூகுள்

Advertiesment
வாட்ஸ்ஆப்புக்கு போட்டியாக ஆப்களை களமிறக்கும் கூகுள்
, புதன், 25 மே 2016 (16:29 IST)
கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெஸெஞ்சர், ஆர்குட் போன்ற தகவல் பரிமாற்ற அப்ளிகேஷன்கள், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்றவற்றின் வருகையால் அதன் பயன்பாடுகள் மிக அதிக அளவில் குறைந்துள்ளது.


 
 
வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் உள்ள பல்வேறு புதிய வசதிகளாலும், எளிமையான உபயோகத்தன்மையாலும் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்பை வாடிக்கையாளர்கள் அதிகமாக நாடுகின்றனர்.
 
இந்நிலையில் இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் இரண்டு புதிய ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆலோ, டுவோ என இந்த இரண்டு ஆப்களும் வாட்ஸ்ஆப்புக்கு போட்டியாக களம் இறங்கியுள்ளது.
 
இந்த ஆலோ ஆப்-இல் மெசேஜ்களை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் உள்ளது போல் என்கிரிப்ஷன் வசதியும், நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக பதில் வழங்கும் ஆப்ஷன்களும் இதில் உள்ளன.
 
டுவோ ஆப்பை பயன்படுத்தி வீடியோ காலிங் எளிதாக செய்யமுடியும். ஆஅலோ, டுவோ என்ற இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொண்டர்கள் 25 லட்சம்; பெற்ற வாக்குகள் 10 லட்சம் : குழப்பத்தில் கேப்டன்