Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னால கூட முடியல… சின்னப்பையன் கலக்கிட்டான் – சேவாக்கின் பாராட்டை பெற்ற பிருத்வி ஷா!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (12:40 IST)
நேற்று ஒரே ஓவரில் அடுத்தடுத்து 6 பவுண்டரிகளை விளாசிய பிருத்வி ஷாவை சேவாக் பாராட்டியுள்ளார்.

நேற்று நடந்த டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை கொல்கத்தாவின் ஷிவம் மவி வீச அந்த ஓவரின் அனைத்து பந்துகளிலும் பவுண்டரிகளை பறக்க விட்டார் பிருத்வி ஷா. அந்த ஓவரில் மவி வீசிய ஒரு வொய்ட் பந்தையும் சேர்த்து மொத்தம் 25 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதத்தையும் பதிவு செய்தார் பிருத்வி ஷா.

இதுகுறித்து பாராட்டி பேசியுள்ள இந்தியாவின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் சேவாக் ‘6 பந்துகளில் 6 பவுண்டரி விளாசுகிறார் என்றால் ஒவ்வொரு பந்தையும் சரியான கேப்பில் அடிக்கிறார் என்று பொருள். நானும் எல்லா பந்தையும் பவுண்டரிக்கு அனுப்பவே விரும்புவேன். ஆனால் என்னால் 6 பவுண்டரிகள் அடிக்க முடியவில்லை. இதை சாதிக்க சரியான டைமிங் வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments