ஏன் டாம் கரணுக்கு கடைசி ஓவர்… ரிஷப் பண்ட் பதில்!

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (10:18 IST)
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடைசி ஓவரை ஏன் ரபாடாவுக்குக் கொடுக்கவில்லை என்பது குறித்து பேசியுள்ளார்.

நேற்று நடந்த முதல் குவாலிபையர் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 172 ரன்கள் சேர்த்த நிலையில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டூபிளஸ்சிஸ்ஒரு ரன்னில் அவுட்டாகி போதிலும் ருத்ராஜ் மற்றும் உத்தப்பா மிக அபாரமாக விளையாடினர். கடைசியில் களமிறங்கிய தோனி அடுத்தடுத்து ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து தான் ஒரு ஃபினிஷர் என்பதை உறுதி செய்து அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்நிலையில் கடைசி ஓவரில் ரபாடாவை பயன்படுத்தாமல் ஏன் பண்ட் டாம் கரண்ணை பயன்படுத்தினார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. ஏனென்றால் தோனியை சில போட்டிகளில் நிற்கவைத்து சில போட்டிகளை வென்றுள்ளார் ரபாடா. இதுகுறித்து பேசியுள்ள பண்ட் ‘டாம், அதுவரை சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதனால் அவருக்கு கொடுத்தோம். எங்கள் ரன்கள் வெற்றி பெற போதுமானவைதான். ஆனால் சென்னை அணி அதிரடியான தொடக்கத்தை பெற்றனர். தவறுகளில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்வோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments