Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையுடன் மோதப்போவது ராயல் சேலஞ்சர்ஸா? ராஜஸ்தான் ராயல்ஸா?

Advertiesment
சென்னையுடன் மோதப்போவது ராயல் சேலஞ்சர்ஸா? ராஜஸ்தான் ராயல்ஸா?
, புதன், 20 மே 2015 (16:39 IST)
இன்று  நடைபெறும் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2ஆவது குவாலிபயரில் சென்னையுடன் மோதவுள்ளது.
 
புனேயில் இன்று இரவு நடைபெறும் 8ஆவது ஐ.பி.எல். டி-20 போட்டியின் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
 

 
இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி போட்டியை விட்டு வெளியேறி விடும். வெற்றி பெறும் அணி சென்னையுடன் 22ம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெறும். 
 
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்:
 
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் 7 போட்டிகளில் வென்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளது.
 
webdunia

 
இந்த அணியில் விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் 3ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அதுபோல கிறிஸ் கெய்ல் 80 போட்டிகளில் விளையாடி 3131 ரன்கள் குவித்துள்ளார். மேலும், டி வில்லியர்ஸ், டேரன் சமி போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவராது களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் எதிரணிக்கு ஆபத்துதான்.
 
அதேபோல் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க், டேவிட் வைஸ், வருண் ஆரோன், போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதனால் அந்த அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாகவே உள்ளதால் எதிரணியை துவம்சம் செய்ய வாய்ப்புள்ளது.
 
மேலும் அடுத்தப் பக்கம்..

ராஜஸ்தான் ராயல்ஸ்:
 
இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் 5 போட்டிகளிலுமே வென்று பிரமாதமாகவே முன்னேறியது. மொத்தம் 7 போட்டிகளில் வென்றது. 5 போட்டிகளில் தோல்வியடைந்தது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
 
webdunia

 
இந்த அணியில் அஜிங்கே ரஹானே ரன் குவிப்பில் 498 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வாட்சன், சஞ்சு சாம்சன், கருண் நாயர் போன்ற அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதேபோல பந்துவீச்சில் ஜேம்ஸ் பால்க்னர், ஸ்டூவர்ட் பின்னி, டிம் சவுதி, கிறிஸ் மோரிஸ் போன்ற சிறப்பான வீரர்களும் உள்ளனர்.
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இவ்விரு அணிகளும், ஐபிஎல் தொடரில் இதுவரை 15 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 7 வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
 
இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி, சோனி செட் மேக்ஸ், சோனி கிக்ஸ் டெலிவிஷன்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil