Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார் சுரேஷ் ரெய்னா!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (11:39 IST)
ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் சுரேஷ் ரெய்னா என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு. 
 
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், தனிப்பட்ட காரணங்களுக்கு சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments