Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே வீரர்களுக்கு தொற்று பரவியது எப்படி?

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (09:52 IST)
சென்னை அணி நிர்வாகம், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளது. 
 
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
 இந்நிலையில் இது குறித்து சென்னை அணி நிர்வாகம், வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிந்தவரை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள வீரர் விமான பயணத்தின்போது மற்ற வீரர்களுடன் நெருக்கமாக இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. 
 
கொரோனா பதிப்புக்குள்ளான வீரருக்குச் சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட போது அவருக்குத் தொற்று இல்லை. துபாய் வந்த பிறகுதான் அவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால், மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரவியிருக்கச் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியோட விளையாட ஆசை.. ஆனா அது நடக்கவே இல்ல! - மனம் திறந்த டேல் ஸ்டெயின்!

WTC இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளதா? என்ன செய்ய வேண்டும்?

சொந்த மண்ணில் 0-3 என படுதோல்வி: சச்சின் கொடுத்த அட்வைஸ்..!

பும்ராவிடம் கேப்டன்சியைக் கொடுங்கள்… கொந்தளுக்கும் இந்திய ரசிகர்கள்!

சொந்த மண்ணில் வொயிட்வாஷ்… சச்சினுக்குப் பிறகு ரோஹித் படைத்த மோசமான சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments