Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனியின் பயோபிக்கை விமானத்தில் பார்த்தேன் – வாட்சன் மனம்திறந்த பாராட்டு!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (17:00 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஷேன் வாட்சன் சிஎஸ்கே கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தைப் பற்றி பெருமையாக பேசியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கும் வாட்சனின் ரசிகர்களுக்கும் மிகவும் உணர்வுப் பூர்வமான ஒரு தருணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் வாட்சன் சிஎஸ்கே அணியின் சேனலுக்கு அளித்த பேட்டியில் ‘ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் விமானத்தில் தோனியின் பயோபிக்கை பார்க்க நேர்ந்தது. இந்திய கிரிக்கெட்டிலும், இந்திய மக்களிடம் அவர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று அதன் பிறகுதான் எனக்கு புரிந்தது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: DLS முறையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. நமீபியா ஏமாற்றம்..!

ஒழுங்கு நடவடிக்கையாக ஷுப்மன் கில் இந்திய அணியில் இருந்து விடுவிப்பு… பிசிசிஐ அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments