இன்று ஐபிஎல் அட்டவணை: முதல் போட்டி சென்னை vs மும்பை?

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (07:57 IST)
2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என்பது தெரிந்ததே. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகள் ஏற்கனவே துபாய் சென்று உள்ளன. அங்கு வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்தபின் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் இன்று ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியிடப்படும் என ஐபிஎல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அவர்கள் தெரிவித்துள்ளார். ஐபிஎல் விதிப்படி முதல் இரண்டு இடங்களை முந்தைய ஆண்டு பிடித்த அணிகள் அடுத்த ஆண்டு முதல் போட்டியில் விளையாடும். அந்த வகையில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தான் முதல் போட்டியில் விளையாட வேண்டும் 
 
ஆனால் சென்னை அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் முதல் போட்டியில் சென்னை அணிக்கு பதிலாக வேறு அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 அல்லது 15 நாட்கள் கழித்து தான் சென்னை அணிக்கு முதல் போட்டி நடைபெறும் வரையில் அட்டவணை தயாரிக்கப்படும் என்று ஐபிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐசிசி தொடர்கள் முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரை.. 2026ல் இந்திய கிரிக்கெட் அணியின் போட்டிகள்..!

மனைவி அனுஷ்காவுடன் புத்தாண்டை கொண்டாடிய விராத் கோஹ்லி.. நெகிழ்ச்சியான பதிவு..!

75 பந்துகளில் 157 ரன்கள் எடுத்த சர்பராஸ் கான்.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி..!

சூர்யகுமார் யாதவ் எனக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொல்லை தருகிறார்.. நடிகையின் குற்றச்சாட்டால் பரபரப்பு..!

கோமாவுக்கு சென்ற பிரபல கிரிக்கெட் வீரர்.. நலம் பெற ஆடம் கில்கிறிஸ்ட் பிரார்த்தனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments