Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போட்டியில் மட்டுமே வாய்ப்பு – ஜெகதீசனை தூக்கியது ஏன்?

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (09:58 IST)
சென்னை அணியைச் சேர்ந்த நாராயண் ஜெகதீசனை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வாய்ப்பளித்து அணியில் இருந்து தூக்கியுள்ளார் தோனி.

ஐபிஎல் தொடரில் அறிமுகப் போட்டியாக பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் இறக்கப்பட்டார் ஜெகதீசன் நாராயண். அந்த போட்டியில் அவர் 28 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு அறிமுக வீரராக அவர் தனது பங்களிப்பைக் கொடுத்திருந்தார். ஆனால் அதற்கடுத்த போட்டியிலேயே அவர் தூக்கப்பட்டு அவருக்கு பதில் சாவ்லா 6 ஆவது பவுலராக சேர்க்கப்பட்டார். அந்த போட்டியிலும் கூட அவர் ஒரு ஓவர்தான் பந்து வீசினார்.

இந்நிலையில் ஜெகதீசன் நீக்கப்பட்டது ஏன் என தோனி விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘ஒரு இந்திய பேட்ஸ்மென் சிறப்பாக விளையாடாத நிலையில் கூடுதலாக சுழற்பந்து வீச்சாளர்தான் தேவைப்பட்டது.

ஜெகதீசனை 7,8-ம் நிலையில் களமிறக்குவது சரியாக இருக்காது' எனப் பதிலளித்தார். அதனால் அடுத்தடுத்த போட்டிகளிலாவது அவருக்கு வாய்ப்பளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பனியின் தாக்கம் இருக்குமா?.. டாஸ் வெல்லும் அணி எடுக்கப்போகும் முடிவு!

அதிரடி மன்னன் அபிஷேக் ஷர்மா இன்றைய போட்டியில் விளையாட மாட்டாரா?

ரஞ்சி போட்டியில் சதமடித்து விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த ஷுப்மன் கில்!

ஐசிசியின் சிறந்த டெஸ்ட் கேப்டன் விருதை இரண்டாவது முறையாக வென்ற பேட் கம்மின்ஸ்!

பிசிசிஐ-யின் புதிய விதி கோலிக்கு அதிக நெருக்கடியை ஏற்படுத்தும்.. பிராட் ஹாக் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments