பொறுத்தது போதும் பொங்கி எழுந்து விட்டேன்: கிறிஸ் கெய்ல் அதிரடி டுவீட்

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2020 (07:49 IST)
ஐபிஎல் அணிகளில் ஒன்றாகிய பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள கிறிஸ் கெய்ல் இதுவரை இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில் விரைவில் களத்தில் இறங்க உள்ளதாக அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
பஞ்சாப் அணிக்காக பெரும் தொகை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட கிறிஸ் கெயிலை அந்த அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளனர். இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட அவர் விளையாடாமல் உள்ள நிலையில் தற்போது ’பொறுத்தது போதும் ரசிகர்களே, இதோ வந்துவிட்டேன்’ என்று ரசிகர்களுக்கு தனது ட்விட்டர் மூலம் பதில் அளித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் கூறியதாவது: என்னுடைய ஆட்டத்தை காணாமல் தவித்து ஏக்கத்தோடு காத்திருக்கும் ரசிகர்களே, பொறுத்தது போதும் இதோ வந்துவிட்டேன்’ என்று கூறியுள்ளார். யுனிவர்சல் பாஸ் காலத்திற்கு திரும்பி உள்ளேன் என்றும், நீங்கள் எல்லோரும் எனது ஆட்டத்தை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும் என்றும், ஒருவேளை ஏதேனும் விஷமத்தனமாக நடந்தால் என்னால் விளையாட முடியாமல் போகலாம் என்றும், அப்படி எதுவும் நடக்காது என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார் 
 
எனவே விரைவில் பஞ்சாப் அணிக்காக கிரிக்கெட் களத்தில் கிறிஸ்கெயில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்வதேச டி 20 லீக் தொடர்… ஏலத்தில் கண்டுகொள்ளப் படாத அஸ்வின்!

ஐசிசி தரவரிசையில் யாரும் தொடாத உச்சம்… அபிஷேக் ஷர்மா படைத்த சாதனை!

மன்னிப்பு கோரினார் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, ஆனால் கோப்பையை தர மறுப்பு!

ஆஸ்திரேலிய அணியை பொளந்து கட்டிய வைபவ் சூர்யவன்ஷி.. 8 சிக்ஸர்களுடன் மின்னல் வேக சதம்!

திலக் வர்மாவை அழைத்துப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments