சிஎஸ்கே அணி இந்த சீசனில் 5 போட்டிகளை தோற்று மோசமான நிலையில் உள்ளது.
சிஎஸ்கே இதுவரை தான் விளையாண்ட 7 போட்டிகளில் 5 போட்டிகளில் தோற்று புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளது. இதனால் இனிமேல் வரும் ஒவ்வொரு போட்டியும் சிஎஸ்கேவுக்கு முக்கியமானப் போட்டியாக உள்ளது.
இந்நிலையில் இன்று சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியினரோடு மோத உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டுமென்றால் தோனி இறங்கக் கூடாது அல்லது ரன்கள் எதுவும் எடுக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் இதுவரை சிஎஸ்கே வெற்றி பெற்ற இரண்டு போட்டியிலும் தோனி ரன்கள் எதுவும் சேர்க்கவில்லை. தோனிக்கு இப்படி ஒரு டாஸ்க்கா ?