டாஸ் வென்ற ராஜஸ்தான்: முதல் ஓவரில் விக்கெட்டை இழந்த பஞ்சாப்!

Webdunia
திங்கள், 25 மார்ச் 2019 (20:24 IST)
ஐபிஎல் போட்டியின் 4வது ஆட்டம் இன்று பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து பஞ்சாப் அணி தற்போது பேட்டிங் செய்து வருகின்றது
 
இந்த நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே பஞ்சாப் அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார்., அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் குல்கர்னி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி சற்றுமுன் வரை 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது,
 
ராஜஸ்தான் அணியில் இன்று ஸ்டீவன் ஸ்மித் களமிறங்கியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக உள்ளது. அதேபோல் பஞ்சாப் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்ட் கெயில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments