Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க தடை; உச்ச நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:35 IST)
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உத்தரவு வழங்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறைடூடு செய்த வழக்கில் தற்போது நவோதயா பள்ளிகள் தொடங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடங்கப்பட்டது. கிராம புற மாணவர்கள் தரமான கல்வியை பெற நவோதயா பள்ளிகளுக்கு தமிழகத்தில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 
 
நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதனால் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு சார்ப்பில் வாதிடப்பட்டது. அதைத்தொடர்ந்து 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தமிழ் கற்பிக்கப்படும் என எழுத்துபூர்வமாக வழங்கப்பட்டதை அடுத்து நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
 
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழங்கு தொடர்ந்து. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க தற்போது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments