Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலார்டின் வாட்சை உடைத்த மோர்னி மோர்கெல்!

போலார்டின் வாட்சை உடைத்த மோர்னி மோர்கெல்!
, வியாழன், 17 ஏப்ரல் 2014 (11:19 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல். கிரிக்கெட் முதல் ஆட்டத்தில் சுவாரசியமான விஷயங்கள் சில நடந்தன. டாஸ் போடும்போதே சுவாரசியம் துவங்கி விட்டது.
முதலில் கம்பீர் டாஸ் போடும்போது 'ஹெட்ஸ்'  என்றார். ஆனால் ஆட்ட நடுவர் பைகிராஃப்ட் அதனை டெய்ல்ஸ் என்று நினைத்தார். பிறகு சாஸ்திரி மீண்டும் கேட்டபோது கேமராவில் தலை விழுந்தது தெரிய வந்தது. 'ஆரம்பத்துலயே ஆரம்ப்சிச்சுட்டாங்களா...' என்று ரசிகர்கள் வடிவேலு பாணியில் புலம்பத்தொடங்கினர்.
 
மும்பை அணி இலக்கைத் துரத்தும்போது அந்த அணியின் அதிரடி மன்னன் கெய்ரன் போலார்ட் இறங்கும்போது ஓவர் நம்பர் 16. அப்போதே மும்பை மூட்டைக் கட்டியாகிவிட்டது.
 
இந்த நிலையில் மோர்னி மோர்கெல் வேகப்பந்துக்கு சாதகமானா ஆட்டக்களத்தில் சும்மா விடுவாரா. ஆட்டிப்படைத்து விட்டார். பவுன்சர் மூலம் பொலார்டை வரவேற்றார் மோர்கெல். போலார்ட் என்ன செய்வதென்று தெரியாமல் மட்டையை உயர்த்தி தடுத்தாட முயன்றார். பந்து அவரது ரிஸ்ட் வாட்சில் அடித்து வாட்ச் துண்டு துண்டாக சிதறியது.
 
ஏற்கனவே பந்தை 'டைம்' செய்வதில் பிரச்சனை உள்ள போலார்ட், இனி மணிபார்க்கவே சிரமப்படுவார் என்ற ஜோக்குகள் பலமாக வலம் வரத்தொடங்கியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil