Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எந்த பொருட்களை தானமாக வழங்கக் கூடாது தெரியுமா...!!

எந்த பொருட்களை தானமாக வழங்கக் கூடாது தெரியுமா...!!
தானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும் தானமாக கொடுக்கும் சில பொருட்கள் தானம் கொடுப்பவர்களின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். எனவே தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது என்பதைப் பற்றி  தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கிழிந்த துணிகளை தனமாக வழங்கினால் அதுவும் துரதிர்ஷ்டத்தை தான் உண்டாக்கும். எனவே உடைந்த பொருட்கள் மற்றும் கிழிந்த  துணிகளை தானமாக வழங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
 
துடைப்பத்தை தானமாக வழங்குவது என்பது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை தானமாக வழங்குவதற்கு சமம். இது வீட்டில் பணப்  பிரச்சனையைத் தான் வரவழைக்கும்.
 
பிளாஸ்டிக் பொருட்களை தானமாக வழங்குவதும் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். குறிப்பாக இந்த பொருட்களை தானமாக வழங்கினால், அது  ஒருவரது வளர்ச்சியில் தடையை உண்டாக்கும்.
 
பழைய உணவுகளை தனமாக வழங்கினால் வருமானத்திற்கு அதிகமான செலவை சந்திக்க வைக்கும். எனவே பழைய உணவுகளை எப்போதும்  தானமாக வழங்கக்கூடாது.
 
கூர்மையான பொருட்களை தனமாக வழங்கினால் வீட்டில் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். எனவே கூர்மையான கத்தி, கத்தரிக்கோல், ஊசி போன்ற பொருட்களையும் தானமாக வழங்கக்கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாபங்கள் விலக சண்டிகேஸ்வரருக்கு சாந்திப் பரிகாரம்..!