பின் தொடை நரம்பு வலி நம்மில் பலருக்கு ஏற்படும், ஆனால் இதற்கு நாம் அலோபதியின் வலி நிவாரணிகளை நாடும் பழக்கம் கொண்டவர்கள். மாற்று மருத்துவ சிகிச்சை முறையான ஹோமியோ சிகிச்சையில் இதற்கென்றே பிரத்யேகமாக 10 முக்கிய மருந்துகள் உள்ளன, பக்க விளைவுகள் இல்லாத இந்த மருந்துகளை பற்றி பார்ப்போம்:
அம்மோனியம் மூர்- படுத்திருந்தால், நடந்தால் வலி இருக்காது, ஆனால் உட்கார்ந்தால் வலி அதிகரிக்கும் அதற்கு அம்மோனியம் மூர் என்ற மருந்தை மருத்துவர்கள் சிபாரிசு செய்யலாம்.
ரஸ்டாக்ஸ்- ஓய்வாக இருந்தால் வலி அதிகரிக்கும்; அசைந்தாலே வலி ஏற்படுவது, ஆகியவற்றிற்கு ரஸ்டாக்ஸ் பொருத்தமானது. ஆனால் தொடர்ந்து அசைவதால், நடப்பதால் உஷ்ணத்தால் வலி குறையும்.
மெக்னீஷிசியம் பாஸ்- உஷ்ணத்தாலும், அழுத்தத்தாலும் வலி குறையும்.
ஆர்சனிகம் ஆல்பம்- உஷ்ணத்தால் வலி குறையும், நள்ளிரவிலும், படுத்திருக்கும் போதும், குளிர்ச்சியாலும் வலி அதிகரிப்பு, அமைதி குலைந்து தீவிர எரிச்சல், வலி ஆகியவற்றிற்கு ஆர்சனிகம் ஆல்பம்.
ஞஃபாலியம்- கீழே படுப்பதால் அதிகரிக்கும் வலி. மரமரப்பு மற்றும் வலி மாறி மாறியோ அல்லது சேர்ந்தே இருப்பது, இரவில் வலி அதிகரிப்பது, கடுமையான வலி ஏற்படுதல் ஆகியவைகளுக்கு ஞஃபாலியம்.
கோனியம்- படுத்தால், உட்கார்ந்தால், அழுத்தம் கொடுத்தால் வலி அதிகரிக்கும் ; வலி முதுகு நோக்கி மேளேறும், கால்களை தொங்கவிடும்போது வலி குறையும்.
பைட்டோலக்கா- தொடையின் பக்கவாட்டில் ஷாக் அடித்தது போன்ற வலி கீழ் நோக்கி இறங்கும்.
கோலோசிந்திஸ்- இடுப்பிலிருந்து முழங்கால் வரை கடும் வலி; உஷ்ணத்தினாலும் அழுத்தத்தினாலும் வலி குறையும். கோபத்தில் வலி உண்டாகுதல்.
ரூட்டா-தசைக்குள்ளே ஆழத்தில் வலி; மல்லாந்து படுத்திருந்தால் வலி குறையும்; படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போது வலி அதிகரிக்கும்.