மீன்கள் பவுர்ணமியில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் முட்டைகள் இடும் என்பதை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு மீனும் ஆயிரக்கணக்கில் கடற்கரையில் முட்டைகளை இட்டு பிறகு கடலுக்குள் சென்றுவிடும் முட்டைகளிலிருந்து வரும் மீன் குஞ்சுகள் தனது சொந்த தாய் மீனை மிகச் சரியாக கண்டுபிடித்து சேர்ந்து கொள்ளும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இது அதற்குள் இருக்கும் ஒரு உள்ளுணர்வு சார்ந்த விஷயம்.
ஹோமியோபதி விஞ்ஞானமும் சொந்த நெருக்கத்தை நாடுகிறது. அதன்பிறகு அது இயல்பான உள்ளுணர்வாக மாறுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அக்கறையுடனும், நேசத்துடனும் அருகாமையிலும் காணாமல் மேம்போக்காக அணுகும்போது நோய்க்குறிகளின் வலைப்பின்னலில் நாம் சிக்கியிருப்பது போன்ற உணர்வை அடைகிறோம். சற்றே சிரத்தையுடன் அணுகினால் விஞ்ஞானம் தனது அற்புதங்களை மெல்லத் திறக்கும்.
ஹோமியோபதியில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் தனித்துவம் என்பதாகும். தனிப்பட்ட நோயாளியின் உடல் வரலாறை தெரிந்து கொண்டபிறகு ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாகவே அணுகுகிறது ஹோமியோபதி. ஆங்கில மருத்துவம் உங்களுக்கு ஆஸ்த்மா என்றால் ஆஸ்த்மா என்பதற்கு உள்ள பொது மருத்துவத்தையே பரிந்துரை செய்கிறது. தனித்துவம் பார்க்கப்படுவதில்லை. குறிப்பிட்ட நோய்க்கான மருந்து என்பது ஹோமியோபதியை பொருத்தவரை பயனற்றது. இருப்பினும் சில தருணங்களில் இம்மாதிரி மருந்துகளின் பயன்களை ஒதுக்கமுடியாது. ஒரு அவசரக் கட்டத்தில், தனித்துவம் ஆய்வு செய்ய முடியாதபோது உடனடி சிகிச்சை தேவைப்படுவது என்பது நடைமுறை. இதற்காக குறிப்பிட்ட மருந்துகள் ஹோமியோவில் உள்ளன. கீழே மருந்துகளும் அது குணமாற்றும் குறிப்பிட்ட நோய்கூறுகளும் தரப்பட்டுள்ளன :
அகோனைட் : திடீரென நெஞ்சு வறண்டு விடுதல், அதாவது குளிர்கால காற்றில் இது ஏற்படும், மேலும் ஓய்வின்மை, குளிர்பானங்கள் அருந்தியாகவேண்டிய மிகப்பெரிய தாகம், கடுமையான அச்சம் மற்றும் பதற்றம் ஆகியவற்றிற்கு அகோனைட் சிறந்த மருந்து
ஆன்ட்-க்ரட் : நாக்கு பால் போன்று வெள்ளையாகுதல்
அல்லியம் சீபா : கண்களிலிருந்தும் மூக்கிலிருந்தும் நீர் ஒழுகுதல் மற்றும், சளித் தும்மல்.
அலுமினா : மலம் நீராக போவதால் ஏற்படும் சோர்வு மற்றும் பலவீனம்
ஏபிஸ் : நீர்க்கோர்வை, நீர்க்கடுப்பு, உஷ்ணமாக உணர்தல்.
ஆர்க்-நிட் : கண் நோய், நீர்த்த மலம், சத்தமான ஏப்பம், இனிப்புகள் அதிகமாக உண்பதால் எற்படும் உபாதைகள்.
ஆர்னிகா : விளையாட்டால் ஏற்படும் அனைத்து காயங்களுக்கும் இது சிறந்தது, உடலி ஏற்படும் ஒரு வித இனம்புரியாத வலி.
ஆர்ஸெனிக்கம் : கடும் பலவீனம், ஓய்வின்மை மற்றும் கவலை நச்சுணவு மற்றும் வயிற்றுப்போக்கு.
பெல்லடோனா : மண்டை உஷ்ணமடைதல், திடீரென ஏற்படும் வலி உள்ளிட்ட பிரச்சனைகள், கடும் காய்ச்சல்.
பிரையோனியா : சிறு தொந்தரவுகள் தீவிரமடைதலுக்கு இது சிறந்த நிவாரணம்.
கார்போ வெஜ் : வயிற்றுத்தொல்லை மற்றும் சத்தமான ஏப்பத்திற்கு இது சிறந்த நிவாரணி.
சைனா : பலவீனம், வயிற்று உப்புசம் இவை தீராமல் இருக்கும்போது இது சிறந்த ஹோமியோ மருந்தாகும்.
கப்ரம் மெட் : பிடிப்புகள், குளிர்பான இச்சைகளிலிருந்து விடுபட இது வழி வகை செய்கிறது.
கந்தாரிஸ் : அடிக்கடி எரிச்சலுடன் சிறு நீர் கழித்தலுக்கு இது நிவாரணியாக செயல்படுகிறது.
காக்டஸ் : மூச்சுத் திணறுதலுக்கு.
கால்கேரா கார்ப் : ஊட்டச்சத்து முறிவு, முறையற்ற எலும்பு வளர்ச்சி.
கால்க் ஃப்ளுவார் : கடினமான கட்டிகள், நாளங்கள் விரிவைடதல், கடினமான எலும்பு போன்ற வளர்ச்சி.
காஸ்டிகம் : சிறு நேர நரம்பு தளர்ச்சி .
கெலிடோனியம் : மஞ்சட் காமாலைக்கு பயன்படும் அரு மருந்து.
சிக்யூட்டா விரோசா : வலிப்புகள்
சிமிசிஃப்யூகா : வலி நிறைந்த மாதவிடாய்.
டிகிடாலிலிஸ் : குறைந்த நாடித்துடிப்பு.
ட்ரோசெரா : கக்குவான் இருமல்
டல்கமரா : ஒவ்வாமையால் ஏற்படும் சரும புண், வயிற்றுப்போக்கு, கடும் குளிரால் ஏற்படும் கண் வீக்கம், குளிரால் ஏற்படும் வலி.
ஹெபார் சல்ஃப் : தொட முடியாத அளவிற்கு வலியுள்ள வீக்கம்.
ஹைபீரிகம் : பாதிப்படைந்த நரம்பு மண்டல நோய்களுக்கு.
ஐயோடியம் : வீக்கங்கள் குறிப்பாக மார்பக வீக்கத்திற்கு.
நக்ஸ் வாமிகா : அடிக்கடி சிறு நீர் மலம் கழிக்கும் உணர்வு.
மேற் சொன்ன மருந்துகள் ஒரு குறிப்பிட்ட நோய்கூறுக்கு மருத்துவர்கள் பயன்படுத்துவது வழக்கம், இதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைத்த பிறகே சில நோயாளிகளுக்கு ஹோமியோ மருத்துவர் மீது நம்பிக்கையே ஏற்படும், எனினும் ஹோமியோ பதி மருந்துகள் உடனடி நிவாரணத்தை ஒரு தற்காலிக சிகிச்சியாகவே கைகொள்கிறது, உண்மையில் நோய்க்குறிகளின் ஆழமான காரணத்தை கண்டறிந்து அதன் அடிப்படையில் நோய் எதிர்ப்பு சக்திகளை உடலிலேயே வளர்க்கும் மருந்துகளையே ஹோமியோபதி சிகிச்சைக்கு பயன்படுத்துகிறது என்பதோடு இதைத்தான் சிகிச்சை என்றே அது குறிப்பிடுகிறது.