கண்புரை அல்லது விழிப்படலம் (காட்ராக்ட்) என்பது கண்களில் உள்ள பளிங்கு வில்லைகளின் (லென்ஸ்) மேல் பனி மூட்டம் போல் படர்ந்து, வளர்ந்து வரும். இதனால் பார்வை மங்கலாகி வரும். 1999ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், அலோபதி கண் டாக்டரிடம் சென்று, எனது கண்களை பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு கண்புரை வளர்ந்து வருவதாகவும், வலது கண்ணில் இரண்டு வருடம் கழித்து அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அதாவது கண்புரை வளர்ந்து, `முற்றிய நிலையில்' அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது என்பது அலோபதி மருத்துவ முறையாகும்.
முன் குறிப்பிட்டுள்ள காலத்திலிருந்து, "ஹோமியோபதி" மருத்துவத்தில் கண்புரைக்காக, உள்ளுக்குள் சாப்பிடும் மருந்தும், வெளி உபயோக கண் சொட்டு மருந்தும் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். பார்வை குறைபாட்டிற்கு (அமெட்ரோஃபியா) மட்டும் பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடியை உபயோகித்து வருகிறேன். கண்புரைக்காக, கண் டாக்டர் தெரிவித்தபடி, அறுவைச் சிகிச்சைக்கான காலவரம்பைக் கடந்து, "அறுவைச் சிகிச்சை" இல்லாமல் பயன் அடைந்து வருகிறேன் என்பது எனது அனுபவ உண்மையாகும்.
தற்போது எனக்கு வயது 64 ஆகிறது. கண்புரை இருப்பதை ஆரம்பநிலையிலேயே தெரிந்து கொண்டு "ஹோமியோபதி"யில் கண்புரைக்கான மருந்தினை, பொறுமையாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அறுவைச் சிகிச்சையை தவிர்த்து பயன் பெறலாம். படிக்கும்போது, கண்களுக்கும், புத்தகத்திற்கும் இடையில் உள்ள தூரம் 33 செ.மீட்டரில் பார்வை நன்கு தெரிந்தால், கண் பார்வை சீரான நிலையில் இருக்கிறது என்று பொருள்.
கண்புரையின் போதும், முதுமைக் காலத்திலும் கண்களில் உள்ள முக்கிய உறுப்புகளில் சில மாறுபாடுகள் நிகழ்வதால் கண்பார்வை மங்கலாகிறது. அதற்கான காரணங்கள் மூன்று : -
1. பளிங்கு வில்லைகளின் (லென்ஸ்) தன்மை கெட்டியாகுதல்.
2. பளிங்கு வில்லைகளில் ஊடுறுவும் சக்தி குறைந்து, கண்களில் இருக்கும் வெப்பம் குறையும்போது, வில்லைகளுக்கும், விழித்திரைக்கும் (ரெடினா) இடையில் இருக்கும் "தெளிந்த திரவப் பொருள்" (விட்ரியஸ் - ஹ்யூமர்) பனிக்கட்டிபோல் உறைந்து இறுகி வருவதால் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து விழித்திரையில் `பிம்பம்' (இமேஜ்) தெளிவாக விழாததால், பார்வை மங்கலாகத் தெரியும்.
3. விழித்திரையில் இயற்கையான, ஒளி ஈர்க்கும், "ரோடாப்ஸின்" என்ற பொருள் உள்ளது. இது தெளிந்த பார்வைக்கும், வண்ணங்களாகக் காண்பதற்கும் காரணமாக உள்ளது.
வைட்டமின் `ஏ' சத்து குறைபாடு இருக்குமானால், இதன் செயல்பாட்டில் குறைபாடு தோன்றி பார்வை மங்கலாகும்.
பூசணிக்காய், பொன்னாங்கண்ணிக்கீரை, காரட், கல்லீரர், பால், முட்டையின் மஞ்சட்கரு, மீன் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்களில் வைட்டமின் `ஏ' சத்து உள்ளதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதியோர்களுக்கு வரும் கண்புரைக்கான (செனைல் - காட்ராக்ட்) முக்கிய மருந்துகள் : -
கல்கோரியா - ஃப்ளோர், சிலிகா.
வெளி உபயோகக் கண் சொட்டு மருந்து : - சினிரேரியா.