Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் இத்தனை நன்மைகள்...

Advertiesment
கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் இத்தனை நன்மைகள்...
, வியாழன், 3 ஜூன் 2021 (23:11 IST)
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வருவதால் விந்தணுக்கள் அதிகரிக்கும். ஆண்கள் கேரட் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.
 
 
செரிமானத்திற்கும் உதவும். ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால், ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை  சாப்பிட்டு வந்தால், விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும். 
 
வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது, கேரட் சாப்பிட நீங்கும். கொலஸ்ட்ரால் ஆண்கள் எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள  வேண்டும். அதற்கு தினமும் இரவில் உணவு உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர, உடலில் உள்ள  கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும். 
 
ஆரோக்கியமான கண்களை பெற கேரட் சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது  அனைவருக்கும் தெரிந்தது தான்.  
 
இதயத்தை ஆரோக்கியமாக வைக்க கேரட் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து, இதயத்திற்கு எந்த ஒரு  பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். 
 
பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால், பற்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 
 
மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால், தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும். இதானல் அதில் உள்ள வைட்டமின் சி, எலும்புகளை வலுவாக்கும். புற்றுநோயை தடுக்கும் கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான  ஒன்றாகும். ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள். 
 
நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்தான் எளிதில் நோய்களானது தொற்றிக்  கொள்ளும். ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள். இது நோயெதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும். 
 
நீரிழிவு நீரிழிவு இருக்கும் போது கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும்.  மலச்சிக்கல் குடலியக்கம் சீராக செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு சேரட் சாப்பிட்டு  வாருங்கள்.
 
இரத்த அழுத்தம் கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள  உதவும்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆயில் ஸ்கின் உள்ளவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள் !!