இரவில் சருமத்தை பராமரிக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா...?

Webdunia
செவ்வாய், 10 மார்ச் 2020 (16:43 IST)
இரவில் சருமத்தை பராமரிக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா...?
தூங்க செல்லும் முன் சருமத்தை பராமரிக்க போதிய கவனம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் பகல் பொழுதில் சரும ஆரோக்கியத்தை பேணுவது பயனற்றதாகிவிடும். இப்போது தூங்குவதற்கு முன்பாக செய்ய வேண்டியவை என்ன? என்பதை பற்றி இங்கு காண்போம்.
 
இரவில் தூங்க செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். ஆனால் முகத்தை அதிகமாக அழுத்தி தேய்த்து கழுவக்கூடாது. வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். அது சருமத்தில் உள்ள துவாரங்கள் திறக்க வழிவகுப்பதுடன் அதிலிருக்கும்  அழுக்குகளையும் வெளியேற்றி விடும்.
 
மேக்கப் போட்டிருந்தால், எண்ணெய் தன்மை கொண்ட கிளிசரினை பயன்படுத்தி முதலில் மேக்கப்பை நன்கு நீக்க வேண்டும். அதன் பின்  தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். வாரம் இருமுறை முகத்திற்கு நீராவி பிடிப்பது மிகவும் நல்லது. அது முகத்தில் படிந்திருக்கும்  அழுக்குகள் மற்றும் தூசுகளை நீக்கிவிடும்.
 
ஈரமான தலையுடன் தூங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தலைமுடி பிசுபிசுப்பு தன்மையுடன் மாறி, மயிர்கால்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தி விடும்.
 
தலைமுடியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தூங்குவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீளமான கூந்தல் உள்ளவர்கள்  தலைமுடியை தளர்த்தி கட்டிக்கொள்வது நல்லது.
 
தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். அது உடலுக்கு மட்டுமல்ல முகத்திற்கும் நல்லது. மேலும் கண்களுக்கு அடியில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கும். மேலும் முகம் சோர்வடைவதும் தடுக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

பழைய சோறு காலையில் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

முகத்துக்கு பாடி லோஷன் கூடாது: நிபுணரின் அவசர எச்சரிக்கை!

கண்களைப் பாதுகாக்க தினமும் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பழக்கங்கள்!

செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மனநலமும் பாதிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments