Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத செயல்கள்

Advertiesment
உணவு சாப்பிட்டவுடன் செய்யக்கூடாத செயல்கள்
, வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (13:16 IST)
நாம் காலையில் வெந்நீரில் குளித்த உடன், சாப்பிடும் பழக்கமும் சாப்பிட்டுவிட்டு, குளிக்கும் பழக்கமும் சிலருக்கு உண்டு. இவை  இரண்டுமே தவறானவை.


 


உணவு சரியாக செரிக்க சாப்பிட்டதும், ரத்த ஓட்டமானது நமது வயிற்றுப் பகுதிக்கு தான் செல்ல  வேண்டும். ஆனால், வெந்நீரில் குளிப்பதால் சூடான, உடலைக் குளிரிச்சியாக்க அதிக ரத்தம் சருமத்துக்குச் சென்றுவிடும்.  
 
சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்று பகுதிக்குச்  செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, உணவானது சரியாகச் செரிக்க முடியாமல் போய்விடும். எனவே, குளித்து அரைமணி நேரம் கழித்துச் சாப்பிடலாம். அல்லது சாப்பிட்டு விட்டு இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.
 
உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது
 
வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு  முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.
 
தேநீர் குடிக்கக் கூடாது
 
தேயிலை அதிக அளவு  அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.
 
புகை பிடிக்கக் கூடாது
 
உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
 
இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது
 
சாப்பிட்ட பிறகு  லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட  உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.
 
சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது ஏன்?
 
சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில்  உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.
 
சாப்பிட்ட உடனே நடக்கக் கூடாது. ஏன்?
 
சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள  சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.
 
சாப்பிட்டதும் தூங்கக் கூடாது
 
சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும்  நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாட்டி வைத்தியத்தின் மூலம் குடல் புண்ணை குணமாக்கும் வைத்திய குறிப்புகள்