சர்க்கரை நோய் என்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருந்தாலும் சிக்கல்தான்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு 60 எம்.ஜி/டி.ஐ.க்கு குறைவாக இருந்தால் சர்க்கரை தாழ்நிலை என்று கூறுகிறார்கள்.
சர்க்கரை தாழ்நிலையால் ஏற்படும் அறிகுறிகள் இரண்டாகும். அதாவது அட்டானமிக், நியூரோஜிலி கோபினிக் என்பதாகும்.
சர்க்கரை தாழ்நிலையில் இருப்பவர்களுக்கு திடீரென அதிகமான வியர்வை, குமட்டல், கை உதறுதல் போன்றவை ஏற்படலாம்.
இதற்குக் காரணம், சர்க்கரை அளவு தாழும் போது சில சுரப்பிகள் அதிகமாக சுரக்கப்படுகிறது. இது சர்க்கரை தாழ்நிலையை இயல்பாக சரி செய்து கொள்ள முயற்சிக்கும். இதனால்தான் மேற்கூறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன.
சர்க்கரை தாழ்நிலையில் தொடர்ந்து இருந்து, சரி செய்யாவிட்டால், சர்க்கரை தாழ்நிலை மூளையிலும் ஏற்படுவதால் மயக்கம், பேசுவதற்கு சிரமப்படுதல், சம்பந்தமில்லாமல் பேசுவது, கோமா போன்ற நிலை ஏற்படலாம்.