திருக்கரம்பனூர் - உத்தமர் கோயில்
திருக்கரம்பனூர் என்ற இத்திருத்தலமும் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலேயே உள்ளது. சிவன், பிரம்மா, விஷ்ணு என்று மும்மூர்த்திகளுக்கும் இங்கே தனிச்சன்னதிகள் உள்ளன.அமைந்துள்ள இடம்: திருச்சி - விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள சிறிய ரயில் நிலையம். ஸ்ரீரங்கத்திலிருந்து வடக்கே 3/4 கி.மீ. தூரத்தில் உள்ளது. திருச்சியிலிருந்தும், ஸ்ரீரங்கத்திலிருந்தும் திருவெள்ளறை போகும் வழியில் இங்கு இறங்கலாம். இத்தலத்திற்கு பிக்ஷhண்டார் கோயில் என்ற பெயரும் உண்டு. மூலவர்: - புருஷோத்தமன், கிழக்கு நோக்கிய புஜங்கசயனம்.தாயார்: - பூர்வாதேவி, பூர்ணவல்லி.தீர்த்தம்: - கதம்ப தீர்த்தம்.தலவிருட்சம்: - வாழை மரம்.விமானம்: -உத்யோக விமானம்சிறப்பம்சம்: - இந்தத் தலத்திற்கான புராண வரலாறு வியப்பாக உள்ளது. தன்னைப் போல் பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் உள்ளதைச் சகிக்காத சிவபெருமான் பிரம்மனுடைய ஒரு தலையைக் கிள்ளி எறிந்த படியால், பிரம்ம ஹத்தி தோஷம் வந்ததால், சிவனின் கையிலிருந்த கபாலம் கையோடு ஒட்டிக் கொண்டது. சிவன் கையில் ஒட்டிக் கொண்ட கபாலத்தில் மஹாலக்ஷ்மியைக் கொண்டு பிiக்ஷயிடச் செய்ததால் சாபம் தீர்த்துக் கொண்டதாகத் தலவரலாறு கூறுகிறது. சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி என அனைவருக்கும் இங்கே தனிச் சன்னதிகள் உள்ளன. பிக்ஷhடண மூர்த்தியாக சிவன் காட்சியளிப்பதால் பிக்ஷhண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.மங்களாசாஸனம்: - திருமங்கையாழ்வார் தமது ஒரு பாசுரத்தால் மங்களாசாஸனம் செய்வித்தார்.பேரானைக் குறுங்குடியெம்பெருமானை, திருத்தண்கால்ஊரானைக் கரம்பனூர் உத்தமனை, முத்திலங்குகாரார்திண் கடலேழுமலையேழிவ் வுலகேழுண்டும்,ஆராதென் றிருந்தானைக்கண்டதுதென் னரங்கத்தே