Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புறாவாக மாறிய சீக்ரெட் ஏஜெண்ட்: கிறிஸ்துமஸில் ஒரு அதிரடி!

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (20:25 IST)
இந்த வருட கிறிஸ்துமஸை குழந்தைகள் சகிதம் தியேட்டரில் சென்று கொண்டாடும் வகையில் டிஸ்னி வெளியிட்டுள்ள படம்தான் Spies In Disguise

உலக புகழ்பெற்ற சீக்ரெட் ஏஜெண்ட் லான்ஸ் ஸ்டெர்லிங். அவருக்கு தொழில்நுட்பரீதியான கருவிகளை செய்து கொடுக்கும் விஞ்ஞானி வால்டர் பெக்கெட். ஆனால் இருவருக்கும் அவ்வளவாக ஒத்துப்போகாது. ஒருநாள் வால்டர் பெக்கெட் ஆய்விற்காக தயார் செய்த ரசாயனத்தை தண்ணீர் என நினைத்து குடித்து விடுகிறார் லான்ஸ் ஸ்டெர்லிங்.

அந்த ரசாயனத்தின் தாக்கத்தால் ஒரு புறாவாக மாறிவிடுகிறார் லான்ஸ். வழக்கம்போல உலகத்தை அழிக்கும் வகையில் வில்லன் ஒருவன் செயல்பட்டுக் கொண்டிருக்க புறாவாக மாறிபோன லான்ஸ் அவனை தடுக்க வேண்டிய கட்டாயம். வால்டர் பெக்கெட் உதவியுடன் வில்லனின் சதி திட்டங்களை புறாவாக எப்படி லான்ஸ் முறியடித்தார் என்பதை ஒன்றரை மணி நேர ஆக்‌ஷன் காமெடியாக எடுத்திருக்கிறார்கள்.

ட்ராய் குவானே, நிக் ப்ரூனோ என்ற இரண்டு இயக்குனர்கள் இயக்கியுள்ள இந்த படத்தை ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் 2009ல் வெளியான பீஜியன் இம்பாசிபிள் என்ற அனிமேஷன் குறும்படத்தின் தலுவல் ஆகும். ஏஜெண்ட் லான்ஸ் ஸ்டெர்லிங்கிர்க்கு வில் ஸ்மித் மற்றும் வால்டர் பெக்கெட் கதாப்பாத்திரத்துக்கு டாம் ஹாலண்டும் டப்பிங் பேசியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ஸ்டார் வார்ஸ் திரைப்படம் ஹாலிவுட் ரசிகர்களையும், குழந்தைகளையும் ஈர்த்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ்க்கு ஸ்பை இன் டிஸ்குஸ் குழந்தைகள் மற்றும் அனிமேஷன் பட விரும்பிகளுக்கு தரமான ஆக்‌ஷன் காமெடி விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சோகத்தில் தள்ளிய ‘விடாமுயற்சி’.. கை கொடுக்க வரும் ‘குட் பேட் அக்லி’! - மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

இன்று வெளியாகிறது டிராகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

சிம்புவை விட்டு அஜித் பக்கம் செல்கிறாரா தேசிங் பெரியசாமி?

சிவகார்த்திகேயன் 25 படத்தின் டைட்டில் இதுதானா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments