எனக்கு சாவே கிடையாதுடா!: ஜேம்ஸ் பாண்ட் 007 அதிரடி ட்ரெய்லர்

புதன், 4 டிசம்பர் 2019 (19:47 IST)
உலகமெங்கும் உள்ள ஹாலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட் பட ட்ரெய்லர் இன்று வெளியானது.

நாவல் கதையாக தொடங்கி, காமிக்ஸ் தொடராக வளர்ந்து திரைப்படமாக உயிர்பெற்ற கதாப்பாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இயான் ப்ளெமிங் எழுதிய இந்த கதை 1962ல் முதன்முறையாக திரைப்படமாக வெளிவந்தது. ஷான் கொனெரி நடிப்பில் வெளிவந்த ‘டாக்டர்.நோ’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இதுவரை 24 படங்கள் ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை வைத்து உருவாகியுள்ளன.

இந்த பட வரிசையில் அடுத்த வருடம் 25வது படமாக “நோ டைம் டூ டை” வெளியாக இருக்கிறது. கடந்த 4 படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் க்ரெய்க் இதிலும் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இதுதான் அவரது கடைசி ஜேம்ஸ் பாண்ட் படம் என அவரே அறிவித்துள்ளார். இந்த படத்தை கேரி ஜோஜி ஃபுக்குநாகா இயக்கியுள்ளார்.

இதுவரையிலும் வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களை போலவே ரொமான்ஸ் காட்சிகள், அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், அவற்றை தாண்டி இதில் ஜேம்ஸ் பாண்ட் கடந்த கால வாழ்க்கையில் செய்த தவறுகள் போன்றவற்றை பேசி ஜேம்ஸ் பாண்ட் படங்களின் ஒட்டுமொத்த ட்ரிப்யூட்டாக இதை தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது.

நோ டைம் டூ டை (சாவதற்கு நேரமில்லை) படத்தின் ட்ரெய்லரை காண...

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வெறித்தனமான லுக்: வைரலாகும் அருண் விஜய்யின் போஸ்டர்!