Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்? பெட்டியுடன் கிளம்பும் போட்டியாளர் யார்?

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (15:52 IST)
இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க்? பெட்டியுடன் கிளம்பும் போட்டியாளர் யார்?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் கடைசி நேரத்தில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும் என்றும் இதில் பண பெட்டியுடன் ஒரு போட்டியாளர் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டும் என்பதும் தெரிந்ததே.
 
கடந்த சீசனில் கவின், கேப்ரில்லா, சிபி உள்பட ஒருசில பண பெட்டியுடன் வெளியேறிய நிலையில் இந்த சீசனில் யார் பண பெட்டியுடன் வெளியேறுவார் என்ற வாதம் தற்போது எழுந்துள்ளது.
 
விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய இருவரும் டைட்டில் வின்னர் பட்டம் பெற வாய்ப்பு இருப்பதால் அவர்கள் இருவரும் பண பெட்டியை எடுக்க மாட்டார்கள் என தெரிகிறது
 
அதேபோல் மைனா மற்றும் அசீம் ஆகிய இருவரும் ஏற்கனவே பண பெட்டியை எடுக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர். அமுதவாணன் நேரடியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால் அவரும் பணப்பெட்டியை எடுக்க வாய்ப்பில்லை.
 
இதனை அடுத்து கதிரவன், ஏடிகே ஆகிய இருவரில் ஒருவர் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லலாம் என்றும் அதில் கதிரவன் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments