காட்ஸில்லா vs கிங்காங்: ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (08:29 IST)
காட்ஸில்லா vs கிங்காங்: ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர்!
உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள காட்ஸில்லா vs கிங்காங் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஏற்கனவே இந்த திரைப்படம் மார்ச் 24ஆம் தேதி ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஒரு சில நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியா அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இந்த திரைப்படம் மார்ச் 31ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக இந்தியாவில் தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என்றும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியானாலும், HBO மேக்ஸ் என்ற ஓடிடி பிளாட்பாரத்திலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சுமார் 200 மில்லியன் பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தின் 95% கிராபிக்ஸ் காட்சிகள்தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பல ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது என்பதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தப் படம் தாமதமாக ரிலீஸ் ஆகிறது என்பதும் முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த படம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நேற்று ரம்யா, இன்று இந்த பெண் போட்டியாளரா? பிக்பாஸ் எலிமினேஷன் தகவல்..!

மலேசியாவில் அஜித்துடன் ஸ்ரீலீலா எடுத்து கொண்ட செல்பி: 'ஏகே 64' படத்துக்கான முன்னோட்டமா?

பி.யு.சின்னப்பாவுக்காக ரஜினி செய்த உதவி.. இது யாருக்கும் தெரியாதே

விஜய் கொடுத்த துப்பாக்கிதான் சுடுமா? திடீரென வைரலாகும் சரத்குமாரின் பதிவு

என்கிட்ட சாரி கேக்கணும்னு அவசியமே இல்ல.. ஜெயலலிதா பற்றி சிவக்குமார் பகிர்ந்த தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments