நாவலை படமாக்கும் முயற்சியில் டேவிட் ஃபின்ஜர்
, புதன், 23 ஜனவரி 2013 (15:46 IST)
பைட் கிளப், ஸோடியாக், தி க்யூரியஸ் கேஸ் ஆஃப் பென்சமின் பட்டன்.... டேவிட் ஃபின்ஜரின் படங்கள் எல்லாமே மறக்க முடியாதவை. கடைசியாக இயக்கியது தி கேர்ள் வித் தி ட்ராகன் டாட்டூ. பிரமாதமான த்ரில்லர்.
அடுத்து டேவிட் ஃபின்ஜர் குறி வைத்திருப்பது கில்லியன் ஃப்லைன் எழுதியிருக்கும் கான் கேர்ள் என்ற நாவல். இதுவும் அட்டகாசமான த்ரி ல்லர். இப்போது இந்த நாவல்தான் அதிகம் விற்பனையாகிறது.இந்தப் படத்தை டேவிட் ஃபின்ஜர் இயக்குவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. நாவலை எழுதிய கில்லியன் ஃப்லைன் திரைக்கதைக்கான முதல் ட்ராப்டை எழுதியிருக்கிறார். இந்தப் படத்துக்காக ஏழு இலக்கத்தில் இவருக்கு பணம் தரப்பட்டிருக்கிறது. ரூபாயில் அல்ல டாலரில் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். பல கோடிகள் வரும். இவரின் மேலும் இரண்டு நாவல்கள் திரைப்படமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.நாவலின் அவுட் லைன் இதுதான். ஒரு பெண் தனது ஐந்தாவது திருமண நாளின் போது காணமால் போகிறாள். ஏன் என்ன காரணம் என்பதெல்லாம் தெரியாத நிலையில் எல்லோரும் அவளது கணவனை சந்தேகிக்கிறார்கள். அவனோ நான் நிரபராதி என்கிறான். அவள் என்ன ஆனால், அவளுக்கு வந்த மர்மமான பரிசு பொருள் என்ன என்று போலீஸ் தேடத் தொடங்குகிறது.டேவிட் ஃபின்ஜரை இவ்வளவு தூரம் இம்ப்ரஸ் செய்திருக்கிறது என்றால் நிச்சயம் சுவாரஸியமான கதையாகதான் இருக்கும். எப்படியும் அடுத்த வருடம் படத்தைப் பார்க்கலாம்.