Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஞ்சநேயருக்கு துளசி மாலை வழிபாடு செய்வது ஏன்...?

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:31 IST)
அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர்.


அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் ஆகியன உண்டாயின. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிறத்துடன் ஸ்ரீ துளசி மகாதேவி தோன்றினாள்.

துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார். துளசி தளத்தில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரமன், மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரசுவதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர்.

துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ், செல்வம், மகட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப் பருகினவர் பரமபதம் செல்வர்.

ஆஞ்சநேயரை பல்வேறு விதமான பழங்களால் மாலை கட்டி வழிபாடு செய்தால் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். எலுமிச்சம்பழம்,வாழை பழம், கொய்யாப்பழம், அன்னாச்சிப்பழம் ஆகிய பழங்கள் அனுமன் வழிபாட்டிற்கு உகந்தவையாகும்.

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட் வெளியீடு எப்போது?

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – மீனம் | Meenam 2025 Rasipalan

இந்த ராசிக்காரர்களுக்கு வராமல் இருந்த பணம் வந்து சேரும்!– இன்றைய ராசி பலன்கள்(18.12.2024)!

2025 New Year Astrology: 2025 புத்தாண்டு ராசிபலன் – கும்பம் | Kumbam 2025 Rasipalan

2025 New Year Horoscope: 2025 புத்தாண்டு ராசிபலன் – மகரம் | Magaram 2025 Rasipalan

அடுத்த கட்டுரையில்
Show comments