வள்ளலார் ஏன் விளக்கேந்தி நடந்து மனிதர்களைத் தேடினார் ?

Mahendran
வியாழன், 12 ஜூன் 2025 (18:47 IST)
வள்ளலார் என்ற இராமலிங்க சுவாமிகள், பெரும் கருணைமிகு ஞானி. "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என சொல்வது போல, பிற உயிர்களின் துயரத்தில் உடனே கலந்துகொள்ளும் மனம் கொண்டவர்.
 
ஒருநாள், வீதியில் கையில் விளக்குடன் நின்று, போகும் நபர்களை கூர்ந்து பார்த்தார். அதை பார்த்த சிலர், "சாமி, ஏன் இப்படி ஒளியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்.
 
வள்ளலார் பதிலளித்தது: "நிஜமான மனிதர்கள் செல்கிறார்களா என்று தேடுகிறேன். மனித உடல் இருந்தும், மனமில்லாதவர்கள் பலர். உண்மையான மனிதர்கள் சிலரே!" என்றார்.
 
வள்ளலார் பார்வையில், மனித உருவினால்தான் மனிதனாக முடியாது. உண்மையான மனிதன், பிறருக்காக இரக்கம் கொள்பவன்; அன்புடன் நடப்பவன்; இன்னொருவரின் துயரத்தில் தானும் துயரமடைவவன்.
 
வள்ளுவர் கூறும் அறம் என்னவென்றால் பொறாமை, ஆசை, கோபம், மற்றும் கெட்ட சொற்கள் இல்லாமல் வாழ்தல்.
 
இப்போது நாமெல்லாம் நம் மனத்தில் இந்த "அறம்" இருக்கிறதா என்று சிந்தித்தால், வள்ளலார் ஏன் விளக்கேந்தி நடந்து மனிதர்களைத் தேடினார் என்பது நமக்கு புரியும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்: நாய் வாகனமில்லா யோக பைரவர் தரிசனம்

அடுத்த கட்டுரையில்
Show comments