Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பாவை பாசுரம் பாடல் 11

Webdunia
திருப்பாவை - பாசுரம் பாடல் 11
 
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றரவல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். 
பொருள் :
 
குலத்திற்கே கொடியாக இருக்கும் பெண்ணை எழுப்பும் பாடல் இது.
 
கன்றுகளுடன் கூடியவை; இளமை மாறாமல் இருப்பவை; இப்படிப்பட்ட பசுக் கூட்டங்கள் பலவற்றைக் கறந்த கோபாலர்கள், தங்கள் பகைவர்களின் வலிமை அழியும்படியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று போர் செய்வார்கள். அப்படிப்பட்ட கோபாலர்களின் குலத்தில்  தோன்றிய பொற்கொடியைப் போன்றவளே!
 
காட்டில் வாழும் மயிலைப் போன்ற சாயல் கொண்டவளே! வீதியில் நின்று இறைவன் புகழைப்பாட வேண்டிய நாங்கள், இப்போது உன் வீட்டின் முன் வாயிலில் வந்து பாடிக்கொண்டிருக்கிறோம். கார்மேகத்தைப் போல வடிவழகும், கருணையும் கொண்ட கண்ணனது  திருநாமங்களைப் பாடிக்கொண்டிருக்கிறோம்.
 
ஆனால் நீயோ-உன் உடம்பைக்கூட அசைக்க மாட்டேன் என்கிறாய், வாய் திறந்து ஒரு வார்த்தையும் சொல்ல மாட்டேன் என்கிறாய். செல்வமும், உத்தமமான குணங்களும் வாய்க்கப்பெற்ற நீ, எதை நினைத்து இப்படித் தூங்கிக் கொண்டிருக்கின்றாய். இப்படித் தூங்கலாமா?  எழுந்து வா.
 
                                                                                                                               விளக்கவுரை: ஸ்ரீ.ஸ்ரீ.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல், நேர விரயம் ஏற்படலாம்!– இன்றைய ராசி பலன்கள்(27.11.2024)!

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்..!

2025ம் ஆண்டில் இந்த 3 ராசிக்காரர்கள்தான் பணக்காரர்கள்! தீர்க்கதரிசி பாபா வெங்கா கணிப்பு!

2025 சனி பெயர்ச்சி! ஏழரை சனியின் பார்வையில் விழும் 3 ராசிகள் இதுதான்..! எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்? | 2025 Sani Peyarchi

2025 New Year Horoscope: 12 ராசிக்காரர்களுக்கும் உகந்த தெய்வங்கள் யார்? எப்போது வழிபட வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments