Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருப்பாவை - பாசுரம் 9

திருப்பாவை - பாசுரம் 9
திருப்பாவை பாசுரம் 9:
 
மாமான் மகளே மணிக்கதவம் தாள் திறவாய் ;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
`மாமாயன், மாதவன், வைகுந்தன்' என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
பொருள்:
 
எழுந்திருக்காத பெண்ணை எழுப்பச் சொல்லி, அவள் தாயாரிடம் வேண்டுவதாக அமைந்த பாடல்.
 
மாமன் பெண்ணே! தூய்மையான மணிகள் இழைத்துச் செய்யப்பட்ட மாடத்தில், படுக்கையைச் சுற்றிலும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க,  அகில் முதலியவைகள் (தூப) வாசனை கமழ, படுக்கையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கின்றாயே? எழுந்திரு. மணிகளாலாகிய உன் வீட்டுக்  கதவைத்திற. (அவள் எழுந்திருக்கவில்லை.
 
அதனால் அவளருகில் இருந்த அவள் தாயாரை அழைத்துச் சொல்கிறார்கள்) மாமீ! உங்கள் பெண்ணை எழுப்பக் கூடாதா? அவள் என்ன  ஊமையா? அல்லது செவிடா? அல்லது சோம்பேறித்தனமா? ஆச்சரியமான செயல்களைக் கொண்டவன், திருமகள் கணவன்,  வைகுண்டநாதன்-என்று பெருமாளின் பலவிதமான திருநாமங்களையும், நாங்கள் சொல்வதால் அதைக் கேட்டுப் பரவசப்பட்டு இப்படி இருக்கிறாளா? அவளை எழுப்ப மாட்டீர்களா?
 
                                                                                                                                                                                                                                                                                                              விளக்கவுரை : ஸ்ரீ.ஸ்ரீ

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (24-12-2018)!