Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு !!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2022 (09:32 IST)
சில தெய்வங்களுக்கு நட்சத்திரங்களில் விழா எடுத்துக் கொண்டாடுவர். சில தெய்வங்களுக்கு திதிகளில் விழா எடுத்து கொண்டாடுவர்.


ஆவணி பிறந்து விட்டால் சதுர்த்தி திதியில் விநாயக பெருமானுக்கு விழா எடுப்பார்கள். அதை ‘விநாயகர் சதுர்த்தி’ என்று சிறப்புத் திதியாகச் சொல்வர். அதே போல ஐப்பசி பிறந்து விட்டால் ஆறுமுகனுக்கு விழா எடுக்கும் நாள் சஷ்டி திதியாகும்.

சஷ்டி திதி என்பது ஆறாவது திதியாகும். ஆறுமுகனுக்கு ஆறாவது திதியில், ஐப்பசியில் எடுக்கும் இந்த விழாவில் நாம் கலந்து கொண்டாலோ அல்லது விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டாலோ மண மாலை சூடும் வாய்ப்பு உருவா கும். மகப்பேறு உண்டாகும் வாய்ப்பும் வந்து சேரும்.

‘சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி ‘சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்’ என்று மாற்றம் பெற்றுவிட்டது. அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால், ‘அகப்பை’ எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.

விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும். வாரத விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட ‘விதி’ மாற வேண்டுமானால், திதி பார்த்து விரத மிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபா டு செய்ய வேண்டும்.

Edited by Sasikala
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரம் காமாட்சி கோவிலின் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம்! - இன்றைய ராசி பலன் (27.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (26.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (25.06.2024)!

திருமலையில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் சிறப்புகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments