Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

நினைப்பதை ஆழ்மனதில் பதியவைக்கும் குபேர முத்திரை!

Advertiesment
குபேர முத்திரை
குபேர முத்திரை முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த  காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

 
வாழ்க்கையில் நினைத்த காரியங்களில் வெற்றி பெற குபேர முத்திரை. இதனால் அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியாகக் கருதபடுபவர் குபேரன். குபேர முத்திரையை செய்வதன் மூலம் விரும்பிய வளங்களைப் பெறலாம். எனவேதான் இந்த முத்திரையை குபேர முத்திரை என்று அழைக்கிறார்கள்.
 
செய்யும் முறை:
 
பெருவிரல், சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய மூன்று விரல்களின் நுனிகளும் ஒன்றாகத் தொடும்படி இணையுங்கள். பிற இரண்டு  விரல்களும் மடித்து உள்ளங்கையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் செய்யவும். இந்த முத்திரையைச் செய்யும்முன் நீங்கள் எதைபெற விரும்புகிறீர்களோ அதைக் குறித்து தீவிரமாக மனதில் சிந்தனை செய்யுங்கள். 
 
சில நிமிடங்களுக்குப் பின் இந்த முத்திரையைச் செய்தபடியே அந்தச் சிந்தனையைத் பத்மாசனம் அல்லது சுகாசனத்தில் செய்வது மிகச் சிறந்த பலங்களைத் தரும். முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடியே கூட இந்த முத்திரையை செய்யலாம். அமரும் முறையை விட இந்த முத்திரையைப் பொறுத்தவரை நாம் விரும்புவது எதுவோ அது குறித்த ஒரு  முகமான தீவிரமான சிந்தனையே மிக முக்கியமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மஞ்சள் கயிற்றில் தாலி அணியும் பழக்கம் ஏன் வழக்கமானது?