புதுமனை புகுவிழாவில் பசுவுக்கு ஏன் முக்கியத்துவம்? ஆன்மிக ரகசியம்!

Mahendran
வெள்ளி, 20 ஜூன் 2025 (18:54 IST)
நாம் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தும்போது, கன்றுடன் கூடிய பசுவை புதிய வீட்டிற்குள் அழைத்து வருவது நம் வழக்கம். இது ஒரு பாரம்பரிய சடங்கு மட்டுமல்ல, ஆழமான ஆன்மிக நம்பிக்கைகளையும் கொண்டது.
 
புது வீட்டுக்குள் வரும் பசு, அங்கே புல் தின்று, கோமியத்தை (மாட்டு மூத்திரம்) இட வேண்டும். அந்த கோமியத்தில் மஞ்சள் பொடி கலந்து, புது மனையின் உள்ளும் புறமும் எங்கும் தெளிக்க வேண்டும் என்பதே புதுமனை புகுவிழாவின் முக்கிய நிகழ்வு. இதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் நோய் நொடியின்றி, செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம். கிரகப் பிரவேசம் நடைபெறும் அன்று ஹோமத்தின்போது பசுவையும், கன்றையும் அழைத்து வருவார்கள். அப்படி கோமாதா வருவது, புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
 
இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் தனிப்பலன் உண்டு. பால் நீண்ட வாழ்வையும், தயிர் புத்திர பாக்கியத்தையும், நெய் மோட்சத்தையும், பஞ்ச கவ்யம் ஆன்ம வளர்ச்சியையும் தரும். குறிப்பாக, சிவனுக்கு மிக விருப்பமான அபிஷேகப் பொருள் பஞ்ச கவ்யம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பசுவும், அதன் வழிவரும் பொருட்களும் நம் கலாச்சாரத்தில் புனிதமாகப் போற்றப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments