Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடன் பிரச்சனை எளிதில் தீர செய்யவேண்டிய பரிகார முறைகள்!!

கடன் பிரச்சனை எளிதில் தீர செய்யவேண்டிய பரிகார முறைகள்!!
, புதன், 4 டிசம்பர் 2019 (14:05 IST)
வெள்ளிக்கிழமை அன்று, மஹாலட்சுமி சன்னதிக்கு சென்று மலர்களை கொண்டு பூஜை செய்யவேண்டும். நீங்கள் இந்த ஐந்து பரிகாரங்களையும் தொடர்ந்து செய்தால் உங்களுடைய அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் மரியாதையாகவும், சுகமாகவும்  இருக்கலாம்.
வெள்ளத்தால் பாயாசம் செய்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உங்கள் கைகளால் பசுவிற்கு வழங்கி வரவேண்டும். இதில் முக்கியமாக கடனை வாங்கியவர் கைகளால் பசுவிற்கு பாயாசம் தரவேண்டும். வீட்டில் உள்ளவர்கள் கூட பாயாசம் செய்துதரலாம். 
 
பசியால் வாடும் ஒருவருக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் சாப்பாடு கொடுக்கவேண்டும். 
 
வியாழக்கிழமை குங்குமம் வாங்கி அதனை, வெள்ளிக்கிழமை அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் சென்று தரவேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் 11 வாரங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.இதில் எந்த தடையும் வராமல் பார்த்து கொள்ளவேண்டும். 
 
கோதுமையில் ஆறு துளசி இலை மற்றும் சிறிதளவு குங்குமப்பூவை சேர்த்து அரைத்துக்கொண்டு அதை உங்கள் வீட்டில் வைத்து  வழிப்பட்டால் கடன் தீருவதை நீங்கள் உணரலாம். 
 
வெள்ளிக்கிழமை அன்று, மஹாலக்சுமி சன்னதிக்கு சென்று மலர்களை கொண்டு பூஜை செய்யவேண்டும். நீங்கள் இந்த ஐந்து பரிகாரங்களையும் தொடர்ந்து செய்தால் உங்களுடைய அனைத்து கடன் பிரச்சனைகளும் நீங்கி வாழ்வில் மரியாதையாகவும், சுகமாகவும்  இருக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (04-12-2019)!