Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 19-ந் தேதி வரை பக்தர்கள் அனுமதி. 20-ந் தேதி நடை அடைப்பு. சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு..!

Mahendran
சனி, 11 ஜனவரி 2025 (17:22 IST)
சபரிமலையில் ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஜனவரி 20ஆம் தேதி நடை அடைக்கப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் நவம்பர் 16ஆம் தேதி தொடங்கிய நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.

மகரஜோதி தரிசனத்திற்காக தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், ஜனவரி 14ஆம் தேதி ஐயப்பனுக்கு மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. மகரஜோதி தரிசனத்திற்கு பின்னர், ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் அரச கோலத்தில் இருக்கும் ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஜனவரி 20ஆம் தேதி பந்தள மகாராஜா குடும்பத்தினருக்கு மட்டும் சிறப்பு பூஜை தரிசனம் நடத்தப்பட்டு, அதன் பின் அன்று இரவு நடை அடைக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அன்றைய நாளுடன் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் நிறைவு பெறுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – ரிஷபம் | Pongal Special Astrology Prediction 2025

திருவண்ணாமலை ஆருத்ரா தரிசனம், கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

தை மாதம் பொங்கல் சிறப்பு ராசிபலன்கள் – மேஷம் | Pongal Special Astrology Prediction 2025

இந்த ராசிக்காரர்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்! - இன்றைய ராசி பலன் (10.01.2025)!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் மோகினி அலங்கார காட்சி: பக்தர்கள் தரிசனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments