Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2569 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம்.. மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை வெளியீடு..!

2569 ஏக்கரில் சபரிமலையில் விமான நிலையம்.. மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை வெளியீடு..!

Siva

, வெள்ளி, 3 ஜனவரி 2025 (14:00 IST)
சபரிமலையில் 2569 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் இதற்கான சமூக தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கை வெளியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் விமான நிலையம் அவசியம் என்று பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
 
இதை எடுத்து அங்கே சர்வதேச கிரீன் பீல்ட் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2569 ஏக்கரில் மணிமலா மற்றும் எரிமேலி கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. விமான நிலையம் அமைக்கும் பணிகள் குறித்து கோட்டயம் மாவட்ட நிர்வாகம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
விமான நிலையம் அமைக்க மணிமலா மற்றும் எரிமேலி (தெற்கு) கிராமங்களில் இருந்து மட்டும் 1039.876 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட வேண்டும். மொத்தம் 3.4 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும். அவற்றில் 3.3 லட்சம் ரப்பர் மரங்கள், 2492 தேக்கு, 2247 காட்டு பலாமரங்கள், 828 மகோகனி, 1131 பலாமரங்கள், 184 மாமரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும்.
 
சில வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்பட வேண்டியிருக்கும். அவற்றுக்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.
 
விமான நிலைய கட்டுமான பணிகள் மூலமாக 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படும். அவர்களில் 238 குடும்பங்கள் செருவேலி எஸ்டேட் பகுதியில் பணியாற்றும் குடும்பங்களாகும். விமான நிலையம் அமைக்கப்பட்டால் உள்ளூர் வணிகம் மேம்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயரும்.
 
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?