சபரிமலையில் ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சபரிமலை ஐயப்பன் மண்டல பூஜைக்காக சமீபத்தில் நடை திறக்கப்பட்ட நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்
இந்த நிலையில் மாலை போட்ட பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைனில் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக கோவில் நடைதிறப்பு நிறத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் ஆன்லைன் பதிவு செய்தவர்களை தவிர வெளி மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
இன்று ஒரே நாளில் 85 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக வெளிவந் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.