தோஷங்களை போக்கும் மயில் இறகு...!

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (00:56 IST)
இந்து கடவுள் முருகனின் வாகனம் மயில் என்பதால், அதன் இறகை புனிதமானதாக கருதி பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்பார்கள். மயில் இறகு பல தோஷங்களை நீக்கும்.
 
மயில் முருகப்பெருமானின் வாகனம். அதுமட்டுமல்லாமல் நமது தேசியப் பறவையும் ஆகும். மழை மேகம் பார்த்தால் மயில் தோகை விரித்தாடும். அப்படி  ஆடும்போது ஒருசில இறகுகள் கீழே விழும். அவ்வவாறு விழுந்த இறகுகளை எடுத்து வந்து விட்டு பூஜை அறையில் வைத்தால் வாஸ்து தோஷம் போகும்  என நம்பப்படுகிறது.
 
இதையும் படியுங்கள்: 
 
யாருக்கெல்லாம் மறுபிறவி கிடையாது...?
மயில் இறகை வீட்டின் முன்பகுதியில் சொருகி வைத்தால் எதிர்மறை ஆற்றலைத் தடுத்து நேர்மறை ஆற்றலை வழங்கும். காவடியில் மயில் இறகை வைப்பது  வழக்கம். வீட்டில் மயில் இறகு, அருகம்புல். துளசி ஆகியவற்றை வைப்பதன் மூலம் வாஸ்து தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை. வீட்டின் வாஸ்து  தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகைப் பயன்படுத்த வேண்டும்.
 
அந்த எட்டு மயில் இறகையும் ஒன்று சேர்த்து ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும். மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு வீட்டில் இருக்கும் எதிர்மறை  ஆற்றல்களும் நீங்கும்.
 
நகை மற்றும் பணம் வைக்கும் பெட்டியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த பெட்டியில் செல்வம் அதிகம் சேர்வதோடு, நிலைக்க செய்யும்  என்று நம்பப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீராத தோல் நோய் தொல்லையா? இந்த கோவிலுக்கு உடனே போங்க..!

இன்று கார்த்திகை தீபம்: விளக்கு ஏற்றுவதன் முறைகளும் பலன்களும்!

திருப்பதி வைகுண்ட ஏகாதசி: 24 லட்சம் விண்ணப்பங்கள்; இன்று குலுக்கல்!

திருவண்ணாமலை கிரிவலம்: இந்த மாத பௌர்ணமிக்கான உகந்த நேரம் அறிவிப்பு!

ஞானம், கல்வி அருளும் கும்பேஸ்வரர்: கும்பகோணம் ஆலயச் சிறப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments