Publish Date: Fri, 13 Aug 2021 (20:47 IST)
Updated Date: Fri, 13 Aug 2021 (20:53 IST)
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் படம் எடுத்து மிரட்டிய வழக்கில் அப்போதைய அதிமுக நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில் ஜாமீன் கேட்டு அருளானந்தம் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து சமீபத்தில் புதிய உத்தரவு பிறப்பித்தது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தினசரி விசாரித்து 6 மாத காலத்திற்குள் முடிக்க வேண்டுமென கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது இவ்வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று அருண்குமார் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்தகுமார், சதீஸ் ஆகியோரை கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டதைத்தொடர்ந்து அருண்குமார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.