Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிகவும் பிரசித்தி பெற்ற துர்க்காஷ்டமி வழிபாட்டு பலன்கள் !!

Goddess Durga 1
, திங்கள், 3 அக்டோபர் 2022 (16:04 IST)
துர்கை பிறந்தது அஷ்டமி திதியில் என்பதால் அம்பிகைக்கு மிகவும் உகந்த நவராத்திரியில் வருகின்ற அஷ்டமி நாள் துர்க்காஷ்டமி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களும் மிகவும் சக்தி வாய்ந்தது என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.


துர்க்கா பூஜையில் ஈடுபட்டவர்களுக்கு கடன், சோகம், பிசாசு ஆகியவற்றால் பீடை உண்டாகாது என்றும், துர்க்கையின் பெயரை உச்சரிப்பதனாலேயே மனிதன், புத்திர பௌத்திர விருத்தியையும், சுபிட்சத்தையும், தன விருத்தியையும் பெற்று மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.

சர்ப்பங்கள், ராட்சர்கள், பூதங்கள், சத்ருக்கள், ரோகங்கள் இவை யாவும் துர்க்கா பக்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடிவிடும் என்பது ஐதீகம்.

எதிரி, நோய், கடன், தொல்லைகள் நீங்கவும் சித்தப் பிரமை, பில்லி, சூனியம், ஏவல், பரம்பரையில் ஏற்பட்ட சாபங்கள், நாகதோஷம், புத்திர தோஷம் இன்ன பிற குறைகளாலும் அவதிப்படுபவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் வருகின்ற சர்வசக்தி படைத்த இந்த துர்க்காஷ்டமி நாளன்று விரதம் இருந்து தங்கள் சக்திக்கு இயன்ற அளவில் துர்கைக்கு பூஜை செய்து வழிபட சர்வ தோஷங்களும் விலகி வாழ்வினில் வளம் பெறுவார்கள் என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை.

துர்க்காஷ்டமி, பத்ரகாளி அவதார தினத்தில் காளியை பூஜிப்பவர்கள் உபாசிப்பவர்கள் தசா மகாவித்யா என்னும் பத்துவித அம்மனின் வடிவங்களையும் பூஜித்த பலனைப் பெறுவார்கள்.

காளிதாஸர், கவிச் சக்ரவர்த்தி கம்பர், ஒட்டக் கூத்தர், வீரசிவாஜி தெனாலிராமன் போன்ற பலரும் காளியின் அருள்பெற்றவர்களே. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு காளிதேவி காட்சி அளித்திருக்கிறார். காளிதேவியை மனதிற்குள்ளாக வைத்து வழிபடுவதால் அச்சங்கள் நீங்கும் தைரியம் அதிகரிக்கும்.

Edited by Sasikala
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஷ்டமி தினத்தில் துர்க்கையை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் !!