காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா!. பக்தர்கள் தரிசனம்...

Mahendran
திங்கள், 2 பிப்ரவரி 2026 (15:53 IST)
முருகனுக்கு உகந்த தைப்பூச திருவிழா நேற்று தமிழகமெங்கும் பக்தர்களால் கொண்டாடப்பட்டது.. தமிழகத்தில் எங்கெங்கெல்லாம் முருகன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் தைப்பூசத் திருவிழா நடைபெற்றது.. குறிப்பாக பழனி, திருப்பரங்குன்றம், மருதமலை, வடசென்னிமலை,திருத்தணி போன்ற கோவில்களில் தைப்பூச திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது..

நேற்று மாலை 3:30 மணி அளவில் தேரோட்டம் துவங்கியது.. அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘கந்தனுக்கு அரோகரா’ என பக்தி கோஷம் எழுப்பிய படி வடத்தை பிடித்து தேர் இழுத்தார்கள்.. அதேபோல் பக்தர்கள் பலரும் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, இளநீர் காவடி போன்ற காவடிகளை எடுத்து நடனமாடி வந்தார்கள்.

கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் திருத்தேர் வலம் வந்தது.. நாமக்கல்லுக்கு அருகே உள்ள ராசிபுரம் திருச்செங்கோடு சேலம் போன்ற பகுதிகளிலிருந்து பெரும்பாலான மக்கள் இந்த கோவிலுக்கு வந்தார்கள்.. பலரும் அன்னதானம் வழங்கினார்கள்..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தைப்பொங்கல் தினத்தில் களை கட்டும் திருச்செந்தூர் முருகன் கோவில்... குவிந்த பக்தர்கள்..!

திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்!.. நீண்ட நேரம் காத்திருந்த சாமி தரிசனம்...

நாளை சூரிய பொங்கல் வைக்க எது நல்ல நேரம்?.. வாங்க பார்ப்போம்!...

தினமும் 3 லட்சம் பேருக்கு உணவு!.. பசியாற்றும் திருப்பதி தேவஸ்தான அன்னதான திட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் மூடப்பட்டது.. இன்று முதல் வழக்கமான சேவைகள் தொடரும்..

அடுத்த கட்டுரையில்
Show comments