Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் சாளக்கிராம பூஜை செய்வது நல்லதா...?

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (10:15 IST)
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு மிகவும் உகந்தது. அன்று சாளக்கிராம பூஜை மற்றும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. சாளக்கிராம பூஜை வழக்கம் போல செய்து பின்னர் மங்கள ஆரத்தி எடுக்க வேண்டும்.


லட்சுமி நரசிம்மரை தினமும் வழிபாடு செய்ய வேண்டும். நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும். தினந்தோறும் பூஜை அறையில் லட்சுமி நரசிம்மரை நினைத்து ‘ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.

அம்பாளுடன் இருக்கக்கூடிய லட்சுமி நரசிம்மரை தாராளமாக, பயப்படாமல் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்.நரசிம்மர் வழிபாட்டில் நிவேதனமாக பானகம் இருக்க வேண்டும். அதுதான் சிறப்பான பலனை கைமேல் கொடுக்கும்.

உலர் திராட்சை, ஏலக்காய், கற்கண்டு போன்ற நிவேதனத்தை தாராளமாக நரசிம்மருக்கு வைத்து வழிபாடு செய்யலாம். எந்த வேண்டுதலாக இருந்தாலும் உண்மையோடு, மன உறுதியோடு செய்யும் பட்சத்தில் அதன் மூலம் நமக்குக் கிடைக்கும் பலன் இரட்டிப்பாகும்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் தாயார் மற்றும் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அனைத்து பொருளாதார பிரச்சனைகளும் தீரும். செல்வம் செழிக்கும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகலாம்! - இன்றைய ராசி பலன் (27.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து இருந்தாலும் தேவை அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (26.06.2024)!

இந்த ராசிக்காரர்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (25.06.2024)!

திருமலையில் உள்ள ஆஞ்சநேயர் சிலையின் சிறப்புகள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன் (24.06.2024)!

அடுத்த கட்டுரையில்
Show comments