இன்று வளர்பிறை சதுர்த்தசி திதி. லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. இன்றைய தினம் விரதமிருந்து நரசிம்மரை வழிபடுவது சகல ஐஸ்வரியங்களையும் பெற்றுத் தரும்.
இன்று நரசிம்மரை தரிசனம் செய்தால் அனைத்துத் தோஷங்களும் விலகி விரும்பும் நியாயமான பூரண பலன்கள் கிடைக்கும். நரசிம்மம் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். மிகப்பெரிய ஜ்வாலையானவன் என்று நரசிம்மனைச் சொல்கிறது புராணம்.
நரசிம்மர் விரத வழிபாட்டிற்கு உகந்து நேரம் அந்திசாயும் வேளையான மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையாகும். அதிலும், வளர்பிறை சதுர்த்தசி திதி மிகவும் விசேஷமானது. சக்தியும் உக்கிரமும் வாய்ந்தவர் நரசிங்க பெருமாள்.
பக்தன் பிரகலாதனுக்காக மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம்.நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடு பொடியாகும்.
உக்கிர மூர்த்தியாக உக்கிர சொரூபமாகத் திகழ்கிறார் ஸ்ரீநரசிங்கப் பெருமாள். இஷ்ட தெய்வமாக நினைத்து தொடர்ந்து வாரந்தோறும் வழிபட்டு வந்தால், நினைத்த காரியங்களையெல்லாம் தங்குதடையின்றி நடத்திக் கொடுத்து அருளுவார் நரசிம்மர். இவரை புதன்கிழமை பானக நைவேத்தியம் செய்து வணங்கி வந்தால், எட்டுத் திசைகளிலும் நம்மைச் சுற்றியுள்ள தீயசக்திகள் அகலும் என்பது ஐதீகம்.
நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், நரம் கலந்த சிங்கம் எனப் பல திருநாமங்கள் உண்டு.