Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தின் சிறப்புக்கள் !!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (09:26 IST)
பிரதோஷங்கள் வாரத்தின் அனைத்து கிழமைகளிலும் வருகின்றன. அப்படி வியாழக்கிழமை அன்று வரும் வியாழப் பிரதோஷத்தின் சிறப்பை பற்றி பார்ப்போம்.


மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்த “பிரதோஷ நேரம்” மற்றும் அது வரக்கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

இந்த பிரதோஷங்கள் எந்தெந்த கிழமைகளில் வருகிறதோ அந்த கிழமைகளுக்குரிய நவகிரக நாயகர்களின் அருளும் அன்றைய தினத்தில் நமக்கு கிடைக்கிறது.

வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷம் “வியாழப்பிரதோஷம்” என பொதுவாக அழைக்கப்படுகிறது. இக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவ பெருமானை கோவிலுக்கு சென்று வணங்குவதால் நவகிரகங்களில் முழு சுபகிரகமான “குரு பகவானின்” அருளையும் சேர்த்து நமக்கு பெற்று தருகிறது.

வியாழன் பிரதோஷங்கள் வருகிற போது ஜாதகத்தில் குரு பகவானின் கோட்சாரம் சரியில்லாமல் இருப்பவர்கள், குரு பகவான் ஆதிக்கம் கொண்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதிகளில், மஞ்சள் நிறப்பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக்கடலைகளை நிவேதித்து வணங்க வேண்டும்.

பின்பு நந்தி பகவான் சிவபெருமான் அம்மன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியவர்களை வணங்க பொருளாதார பிரச்சனைகள், திருமண தடை, புத்திர பேறு இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – விருச்சிகம்! | January 2025 Monthly Horoscope viruchigam

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – துலாம்! | January 2025 Monthly Horoscope Thulam

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா! இன்று மாலை கோலாகல தொடக்கம்!

1 லட்சத்து 8 வடைகளால் பிரம்மாண்ட மாலை! நாமக்கல் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டம்!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கன்னி! | January 2025 Monthly Horoscope Kanni

அடுத்த கட்டுரையில்