Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சந்திரனின் சாபத்தை நீக்கிய கணபதி !!

Lord Ganesha
, புதன், 31 ஆகஸ்ட் 2022 (17:54 IST)
பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை (கொழுக்கட்டை) கையில் எடுத்துக் கொண்டு, உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி, சந்திர லோகம் சென்றார். அங்கு பெருத்த தொந்தியும், ஒடிந்த தந்தமும், நீண்ட தும்பிக்கையும், கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான்.


அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு, ‘ஏ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய். இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது. அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அப வாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திர னும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.

சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர். பிரம்மனோ, தானோ, ருத்திரனோ, விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும், கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார்.

எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் (பௌர்ணமிககுப் பின் வருவது) விரதம் ஏற்று, பலவகை யான பழங்கள், அப்பம், மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதி க்கு அளித்து, அந்தணருக்கு பக்தியோடு தாம் பூல, தக்ஷிணைகளை அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.

பிறகு தேவர்கள் பிருகஸ்பதியைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர். சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக, விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார். தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான் சந்திரன். பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார்.

‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி'யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின், ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன்' என்று விநாயகர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எந்த ஒரு செயலை தொடங்கும் முன் விநாயகரை வணங்குவது ஏன் தெரியுமா...?