Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரியின் சிறப்புக்கள் !!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (09:55 IST)
அன்னை பராசக்திக்கு விருப்பமான வருடாந்திர விசேஷங்களில் ஒன்று நவராத்திரி. ஒவ்வொரு மாதமும் அமாவாசை பிரதமையில் இருந்து தசமி வரை உள்ள பத்து நாட்களும் நவராத்திரியாகவே கருதப்பெறுகிறது.


நான்கு நவராத்திரிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பெறும் நவராத்திரி ‘சாரதா நவராத்திரி’, மாசி மாதத்தில் கொண்டாடப்படும் ‘சியாமளா நவராத்திரி’, ஆடி மாதத்தில் கொண்டாடப்பெறும் ‘ஆஷாட நவராத்திரி’, வசந்த காலத்தில் கொண்டாடப்படும் ‘வசந்த நவராத்திரி’ ஆகியவையாகும்.

புரட்டாசி நவராத்திரியும், பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியுமே பழக்கத்தில் இருக்கின்றன. அதிலும் அதிகமான மக்களால் கடைப்பிடிக்கப்படும் நவராத்திரி விரதமாக புரட்டாசி மாத த்தில் வரும் நவராத்திரியே முக்கியமானதாக இருக்கிறது. அதே நேரம் வசந்த நவராத்திரியும் தவிர்க்க முடியாத நவராத்திரி விரதத்தில் ஒன்றாக இருக்கிறது. வசந்த காலத்தில் பகல் பொழுது அதிகமாக இருப்பதால், வசந்த நவராத்திரி பூஜைகள் பகலிலேயே நடைபெறுகின்றன. வசந்த நவராத்திரியை ‘லலிதா நவராத்திரி’ என்றும் அழைப்பார்கள்.

வசந்த நவராத்திரி என்பது கானகத்தில், கந்த மூலிகைகளைக் கொண்டு செய்யக் கூடியதாகும். இதை ராமபிரான் கானகத்தில் இருந்தபோது, நாரத முனிவர் நடத்தி வைத்ததாக, ராம சரிதம் சொல்கிறது.

புராணத்தில் பங்குனியும், புரட்டாசியும் எமதர்ம ராஜனின் கோரைப்பற்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாத காலங்களும் நோய்க் கிருமிகள் பரவும் காலமாக இருப்பதாகவும், தெய்வ அருள் மனிதருக்குக் கிடைப்பதில் தடை ஏற்படும் காலம் என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் அம்பாளை வழிபடும் நவராத்திரி விரதத்தை கடைப் பிடிக்க முன்னோர் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது!– இன்றைய ராசி பலன்கள்(28.12.2024)!

ஜனவரி 2025 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – மேஷம்! | January 2025 Monthly Horoscope| Mesham | Aries Zodiac

இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு இருக்கும்!– இன்றைய ராசி பலன்கள்(27.12.2024)!

மகாபெரியவர் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி முக்தி தினம்: சிறப்பு ஆராதனைக்கு ஏற்பாடு

ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை! - 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு!

அடுத்த கட்டுரையில்
Show comments