Publish Date: Fri, 23 Sep 2022 (11:00 IST)
Updated Date: Fri, 23 Sep 2022 (11:17 IST)
சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவதும் அப்போது தரிசனம் செய்வதும் ரொம்பவே விஷேசமானது.
சுக்கிரவார பிரதோஷ நாளில் சிவ தரிசனம் செய்தால் கடன் பிரச்சினை தீரும் செல்வ வளம் பெருகும். ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கி விடும்.
வெள்ளிக்கிழமை சுக்கிரவார தினத்தில் வரும் பிரதோஷ நாளில் சிவன் நந்தியை தரிசனம் செய்தால் கடன் பிரச்சினைகள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள் நீங்கும்.
சர்பதோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
பிரதோஷ நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பதன் மூல ம் அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் பிரதோஷம் தினத்தில் கறந்த பசும்பால் கொடுத்து வழிபட வேண்டும். இளநீர் வாங்கித் தரலாம். வில்வ இலை வாங்கிக் தரலாம்.