Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"ஹரிஹரன் சந்திப்பு" திருவிழா கோலாகலம்..! பெருமாளும் சிவனும் சந்திப்பு..!

Advertiesment
Samy

Senthil Velan

, ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (11:28 IST)
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத நிகழ்வாக பொன்னேரி திருஆயர்பாடியில் பெருமாளும், சிவனும் சந்திக்கும் "ஹரிஹரன் சந்திப்பு" திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
 
திருவள்ளூர் மாவட்டம்  பொன்னேரி திருஆயர்பாடி பகுதியில் உள்ள கரி கிருஷ்ண பெருமாள் கோயிலின் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 
கருடோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கரி கிருஷ்ண பெருமாளும், அகத்தீஷ்வரரும் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. இந்த அரிய நிகழ்வை காண திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
 
அப்போது "கோவிந்தா" "கோவிந்தா"எனவும் "ஹரஹரா மஹாதேவா"  "ஹரஹரா மஹாதேவா" எனவும் பக்தி பரவசத்தோடு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதத்தில் இந்த பிரமோற்சவ விழா வெகுவிமர்சியாக நடைபெற்றது.

webdunia
கருட வாகனத்தில் கரி கிருஷ்ண பெருமாளும், ரிஷப வாகனத்தில் அகத்தீஸ்வரும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது கரி கிருஷ்ண பெருமாளிடம் இருந்தும் அகத்தீஸ்வரருக்கு சீர்வரிசையும், அகத்தீஸ்வரரிடம் இருந்து கரி கிருஷ்ண பெருமாளுக்கு சீர்வரிசையும் வழங்கப்பட்டது.


பின்னர் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் வைபவமான ஹரிஹரன் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சித்திரை பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை கரி கிருஷ்ண பெருமாளின் தேர்திருவிழா நடைபெற உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு விபரீத எண்ணங்கள் தோன்றலாம்.. கவனம் தேவை! இன்றைய ராசி பலன் (28.04.2024)!